சேலையில் தூக்குப்போட்டு வாலிபர் சாவு
ராசிபுரத்தில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் சேலையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ராசிபுரம்:-
ராசிபுரத்தில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் சேலையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியுடன் தகராறு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் இ.பி. ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30). சீனிவாசன் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துடன் மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த நிவேதா கணவரிடம் கோபித்துக்கொண்டு குருசாமிபாளையத்தில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சீனிவாசன் அவரது வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
தற்கொலை
அப்போது அவர் மனைவி இல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், வீட்டில் மின்விசிறியில் மனைவி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தூக்கில் பிணமாக தொடங்கிய சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசன் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சீனிவாசனுக்கு நிவேதா (27) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
Related Tags :
Next Story