பயிர்களை இஅடங்கலில் பதிவு செய்தால் மட்டுமே இழப்பீடு


பயிர்களை இஅடங்கலில் பதிவு செய்தால் மட்டுமே இழப்பீடு
x
தினத்தந்தி 11 Jan 2022 11:48 PM IST (Updated: 11 Jan 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

பயிர்களை இஅடங்கலில் பதிவு செய்தால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என அதிகாரி தெரிவித்தார்.

காவேரிப்பாக்கம்

பயிர்களை இ-அடங்கலில் பதிவு செய்தால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என அதிகாரி தெரிவித்தார்.

அரசால் நடவடிக்கை 

காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் அனைத்து தோட்டக்கலை பயிர்களையும் இ அடங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் பயிர் சேதமான பரப்பு இ அடங்கலில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்த பின்னரே இழப்பீடு வழங்க அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மேலும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தாலும் இ-அடங்களிலும் பதிவு செய்து இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். எனவே விவசாயிகள் அனைவரும் தாங்கள் பயிரிடும் அனைத்து தோட்டக்கலை பயிர்களையும் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மூலம் இ-அடங்
கலில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கூட்டுறவு வங்கியில் பதிவு 

எனவே அனைத்து வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் இ-சேவை மையத்தில் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையும், உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேசையும் தொடர்புகொள்ளளாம்.
இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story