அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 5 பேர் மீது வழக்கு


அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Jan 2022 6:26 PM GMT (Updated: 11 Jan 2022 6:26 PM GMT)

திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்தது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே சுண்ணாம்யிருப்பு கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் பல்வேறு கிராமங்கள் மற்றும் ஊர்களில் இருந்து அலங்கரித்து கொண்டுவரப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளை ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்துவிட்டனர். இதை ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளை பிடித்தனர். இதில் மாடுகளை பிடித்த இளைஞர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த மஞ்சுவிரட்டை காண சுற்றிவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் பொட்டலில் திரண்டிருந்தனர். இந்நிலையில் அரசு அனுமதியின்றியும், கொரோனா தொற்று நோய் தடுப்பு ஊரடங்கு விதிமுறைகளை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக சுண்ணாம்யிருப்பு கிராம நிர்வாக அலுவலர் ஜோதி கொடுத்த புகாரின் பேரில், சுண்ணாம்யிருப்பைச்சேர்ந்த மகேந்திரன் (வயது 43), ஈஸ்வரன் (50), தினேஷ் (27, அம்பலத்தரசு (20), பெரியகருப்பன் (70) ஆகிய 5 பேரும் மீதும் திருக்கோஷ்டியூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.


Next Story