திருப்புவனத்தில் களை கட்டிய ஆட்டுச்சந்தை


திருப்புவனத்தில் களை கட்டிய ஆட்டுச்சந்தை
x
தினத்தந்தி 12 Jan 2022 12:09 AM IST (Updated: 12 Jan 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்புவனத்தில் ஆட்டுச்சந்தை களை கட்டியது.

திருப்புவனம்,

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்புவனத்தில் ஆட்டுச்சந்தை களை கட்டியது.

ஆட்டுச்சந்தை

திருப்புவனத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன்கிழமைகளில் வாரச்சந்தைகள் நடைபெறும். இதில் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, காய்கறி, பழங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நடைபெறும். மறுநாள் புதன்கிழமை மாட்டுச்சந்தை மட்டும் நடைபெறும்.
 வாரச்சந்தையில் திருப்புவனத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, பழங்கள், மற்றும் பல பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இந்த வாரம் பொங்கல் திருநாள் வருவதால் நேற்று செவ்வாய்க்கிழமை ஆட்டுச்சந்தை விறுவிறுப்பாக நடைபெற்றது. 

வியாபாரம் சூடுபிடித்தது

இதற்காக மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மதுரை, மேலூர் உள்பட பல பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவே வெளியூர் வியாபாரிகள் அதிகமான ஆடுகளை கொண்டு வந்து நிறுத்தி இருந்தனர். உள்ளூர் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று காலை முதலே ஆடு விற்பனை சூடுபிடித்து இருந்தது. 
இதனால் மதுரை- மண்டபம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆடுகளை ஏற்றி வந்த மினி வேன்கள், ஆட்டோக்கள் அதிகமாக நின்றன. நகர் மற்றும் கிராமப்புற வியாபாரிகள், கறிக்கடை தொழில் செய்பவர்கள் ஆடுகளை வாங்க சந்தையில் அதிகமாக திரண்டிருந்தனர். இதேபோல் கோழி, சேவல் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

Next Story