புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
தாராபுரத்தில் புகையிலை பொருட்களை விற்ற 2 பேரை தாராபுரம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 150 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் புகையிலை பொருட்களை விற்ற 2 பேரை தாராபுரம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 150 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புகையிலை பொருட்கள் விற்பனை
தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியான பஸ் நிலையம், எம்.எஸ்.பி நகர், பொள்ளாச்சி ரோடு ஆகிய பகுதியில் புகையிலை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தாராபுரம் போலீசார் பொள்ளாச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு 2 பேர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
அவர்கள் 2 பேரையும் போலீசார் தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தாராபுரம் எம்.எஸ்.பி.நகரைச்சேர்ந்த சுந்தரம் மகன் ஹரிபிரசாத் (வயது27), மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜோதிராம் மகன் சோப்பாராம் (27) ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர். அதன் பேரில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடத்தையும் காண்பித்தனர்.
அப்போது அதில் கட்டுக்கட்டாக புகையிலை பொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை கண்டுபிடித்த போலீசார் அதனை பரிசோதனை செய்த போது அங்கு இருந்த 32 பண்டல்கள் உள்பட மொத்தம் 150 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பிறகு ஹரி பிரசாத் மற்றும் சோப்பா ராம் ஆகிய 2 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story