‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சிதிலமடைந்த மின்கம்பம்
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனி விவேகானந்தர் தெருவில் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பம் தற்போது மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிதிலமடைந்த மின்கம்பம்பத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீனா, எடமலைப்பட்டி புதூர் , திருச்சி.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தாலுகா பிச்சாண்டவர் கோவில் அருகே உள்ள பட்டத்தம்மாள் முதல் தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்யாஸ்ரீ, மணச்சநல்லூர், திருச்சி.
கழிவுநீர் கால்வாயை தூர்வார கோரிக்கை
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம் வார்டு எண் 14, பூக்கொல்லை, தஞ்சை ரோடு, அலங்கநாதபுரம், வீரமாநகரம், கிருஷ்ணாபுரம் ஜின்னா திடல் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் கால்வாய் தூர் வாராமலும், குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று வியாதிகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வாருவதுடன், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்தபா, திருச்சி.
மேம்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் பாலக்கரை மேம்பாலம் , பீமநகர் பகுதி பாலம் இறங்குகிற இடத்தில் குறிப்பாக 6 இடங்களில் விரிசல் ஏற்பட்டும், பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், இரவு நேரங்களில் அந்த மேம்பாலத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த மேம்பாலத்தை ஆய்வு மேற்கொண்டு இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சையது முஸ்தபா, பாலக்கரை, திருச்சி.
சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி செய்யப்படுமா?
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா மலையடிப்பட்டி கிராமம் ஆவாரம்பட்டி ஆதிதிராவிட மக்களின் சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு சரியான பாதை வசதியோ, சாலையோ கிடையாது. மேலும், அங்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதி செய்து தரப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் உடல்களை அடக்கம் செய்ய வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இங்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
கண்ணன், மணப்பாறை, திருச்சி.
தபால் நிலையத்தில் சர்வர் கோளாறு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்க நகரில் உள்ள தபால் நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள கணினியில் சர்வர் கோளாறு காரணமாக மணி ஆர்டர், பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கோளாறை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருராஜன், ஸ்ரீரங்கம்.
Related Tags :
Next Story