தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு


தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 12 Jan 2022 1:29 AM IST (Updated: 12 Jan 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே உள்ள நம்பாளி பகுதியை சேர்ந்தவர் ரவி, தொழிலாளி. இவருடைய மனைவி சிந்து (வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு தினமும் மனைவியுடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. 
சம்பவத்தன்று இரவு ரவி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை அவரது மனைவி சிந்து கண்டித்துள்ளார். தொடர்ந்து கணவரை பயமுறுத்துவதற்காக வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி விட்டு தீக்குச்சியை உரசி கீழே போட்டார்.  
அப்போது, எதிர்பாராத விதமாக தீ அவரது ஆடையில் பற்றியது. இதில் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறினார். உடனே உறவினர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த சிந்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சிந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலைக்கு செல்லாத கணவரை பயமுறுத்துவதற்காக தீக்குளித்த பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story