குழந்தை தாய்ப்பால் குடிக்காததால் தூக்குப்போட்டு பெண் டாக்டர் தற்கொலை


குழந்தை தாய்ப்பால் குடிக்காததால் தூக்குப்போட்டு பெண் டாக்டர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Jan 2022 1:47 AM IST (Updated: 12 Jan 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு அருகே குழந்தை தாய்ப்பால் குடிக்காததால் மனமுடைந்து பெண் டாக்டர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தள்ளது.

மைசூரு: மைசூரு அருகே குழந்தை தாய்ப்பால் குடிக்காததால் மனமுடைந்து பெண் டாக்டர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தள்ளது. 

குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுப்பு

மைசூரு நகரம் குண்டுராவ் நகரை சேர்ந்தவர் அர்பிதா(வயது 26). இவர், தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் டாக்டராக உள்ளார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தது. தற்போது 9 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு, தாயான அர்பிதா தாய்ப்பால் கொடுத்து வந்தார்.  

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுத்து வந்ததாக தெரிகிறது. பல்வேறு முயற்சி செய்தாலும் குழந்தை தாய்ப்பால் குடிக்கவில்லை. இதனால் அர்பிதா மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 

தாய் தற்கொலை

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அர்பிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த வித்யாரண்யபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 

பின்னர் தற்கொலை செய்து கொண்ட அர்பிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், குழந்தை தாய்ப்பால் குடிக்காததால் மனமுடைந்து அர்பிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து  வித்யாரண்யபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story