கொரோனா தடுப்பு விதிகளை மீறி பாதயாத்திரை; டி.கே.சிவக்குமார் உள்பட 41 பேர் மீது வழக்கு


கொரோனா தடுப்பு விதிகளை மீறி பாதயாத்திரை; டி.கே.சிவக்குமார் உள்பட 41 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 Jan 2022 2:01 AM IST (Updated: 12 Jan 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

டி.கே.சிவக்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு:மேகதாது திட்டத்தை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, கர்நாடக காங்கிரஸ் சார்பில் மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடையை மீறி பாதயாத்திரை நடத்தியதாக ஏற்கனவே சாத்தனூர் போலீஸ் நிலையத்தில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்பட 31 பேர் மீது என்.டி.எம்.ஏ.(பேரழிவு மேலாண்மை சட்டம்) சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக கனகபுரா தாசில்தார் நேற்று சாத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் டி.கே.சிவக்குமார் உள்பட 41 பேர் மீது சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் டி.கே.சிவக்குமார் பெயர் முதல் பெயராகவும், டி.கே.சுரேஷ் எம்.பி.யின் பெயர் 2-வது பெயராகவும் சேர்க்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணபைரேகவுடா எம்.எல்.ஏ. பெயர் 3-வது பெயராக சேர்க்கப்பட்டு உள்ளது. முன்னாள் மந்திரி ஆஞ்சநேயா, முன்னாள் எம்.பி. துருவநாராயண் உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு ஆகி உள்ளது.

Next Story