விருதுநகர் போலீசார் பதக்கம் வென்றனர்
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் விருதுநகர் போலீசார் பதக்கம் வென்றனர்.
விருதுநகர்,
போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் தென் மண்டல அணி சார்பாக விருதுநகர் மாவட்ட போலீசார் செல்வகுமார், மயில்வாகனன், முருகேசன், ஆனந்த், தாமரைக்கண்ணன், முத்துக்குமார், பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் முத்துக்குமார் ஒரு பிரிவில் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், மேற்கு போலீஸ் நிலைய போலீஸ் காரர் ஆனந்த் ரைபிள் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றனர். தென்மண்டல துப்பாக்கிச்சுடும் அணி ரைபிள் பிரிவில் முதலிடமும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடமும் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Related Tags :
Next Story