நெல் கொள்முதல் நிலையம்


நெல் கொள்முதல் நிலையம்
x
தினத்தந்தி 11 Jan 2022 8:44 PM (Updated: 11 Jan 2022 8:44 PM)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 
கொள்முதல் 
ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சி மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெல்கொள்முதல் நிலையத்தை  தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 
 விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்காக பயிர் கடன், விவசாயக்கடன் தள்ளுபடி மற்றும் விவசாய பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்தல் போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
நலத்திட்டங்கள் 
அனைத்து தரப்பு மக்களும் பயன்ெபறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். 
ராஜபாளையம் தொகுதியில் எண்ணற்ற நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், சேத்தூர் விவசாய சங்க தலைவர் முனீஸ்வரன், செயலாளர் ஆறுமுகம், கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story