தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Jan 2022 2:16 AM IST (Updated: 12 Jan 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உடனடி நடவடிக்கை

சேலம் மகேந்திரபுரி பேங்க் காலனி 4-வது தெருவில் குப்பைகள் குவிந்து கிடந்தது. இதனால் அந்த தெருவில் கொசுத்தொல்லை அதிகரித்ததுடன் நோய் பரவும் அபாயம் உள்ளதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. செய்தியை பார்த்தவுடன் அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கினர். உடனே தூய்மை பணியாளர்களை கொண்டு குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர். குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-ஆர்.சோனியா, மகேந்திரபுரி, சேலம்.

சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முன்பகுதியில் பயணிகள் நிழற்குடையுடன் கூடிய பஸ் நிறுத்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல்படத் தொடங்கியது. இங்கு டவுன் பஸ்கள் நின்று செல்ல மருத்துவ கல்லூரி வளாகத்தின் முன்பகுதியில் இருந்து தனி பாதை ஏற்படுத்தப்பட்டது. இந்த பாதையை ஆக்கிரமித்து 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த பாதையில் டவுன் பஸ்கள் நிழற்குடை முன்பு நின்று செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள இந்த வாகனங்களை அங்கு நிறுத்த தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திகேயன், தர்மபுரி.

நோய் பரவும் அபாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம், தியாகர்சனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் வடமாநில மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த பகுதியிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.சட்டர்ஜி, சூளகிரி, கிருஷ்ணகிரி.
====
குவிந்து கிடக்கும் குப்பைகள்  
சேலம் செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் செட்டி ரோடு பகுதியில் குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி சாலையோரத்தில் சிதறிக்கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்துள்ள குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்மக்கள், செவ்வாய்பேட்டை, சேலம்.

Next Story