புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் தாிவித்துள்ள புகார் குறித்த விவரம் வருமாறு
தார்ச்சாலை வசதி வேண்டும்
கும்பகோணம் நகரப்பகுதிகளில் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையில் கும்பகோணம் புதிய பஸ்நிலையத்தை அடையும் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, ரெயில்வே புது சாலை, தஞ்சாவூர் பிரதான சாலை, 60அடி சாலை போன்றவை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கின்றன.இதனால் பஸ் போக்குவரத்து, இருசக்கர வாகனங்களில் செல்வோர், கார்களில் பயணம் செய்வோர் உட்பட பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள் படுமோசமாக உள்ளன. எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்யாணசுந்தரம் கும்பகோணம்.
குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா
தஞ்சை களிமேடு அருகே உள்ள பரிசுத்தம் நகரில் கடந்த சில மாதங்களாக, குடி நீர் குழாய் உடைந்து, சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து, சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள் பரிசுத்தம் நகர்.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலவெளி ஊராட்சியில் ரெட்டிபாளையம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் மாடுகள் சாலையின் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். மேலும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story