அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வீட்டின் மாடியில் வெளியாட்களை அனுமதிக்க கூடாது


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வீட்டின் மாடியில் வெளியாட்களை அனுமதிக்க கூடாது
x
தினத்தந்தி 12 Jan 2022 3:37 AM IST (Updated: 12 Jan 2022 3:37 AM IST)
t-max-icont-min-icon

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வீட்டின் மாடியில் வெளியாட்களை அனுமதிக்க கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

மதுரை
பொங்கல் பண்டிகை தினத்தில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக வாடிவாசல் அமைக்கும் பணி, சாலை இருபுறமும் சவுக்கு கம்புகளால் பாதுகாப்பு வேலி, பார்வையாளர்கள் மேடை உள்ளிட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தின் அருகே உள்ள வீடுகளின் மாடியில் பார்வையாளர்கள் கூடும் அபாயம் இருப்பதால் அங்குள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு காவல் துறை சார்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு நடைபெறும் போது வீடுகளின் மாடியில், குடும்ப உறுப்பினர்களே பார்வையாளர்களாக இருக்க வேண்டும். வெளி நபர்கள் யாரையும் வீட்டின் மேல்தளத்தில் அனுமதிக்கக்கூடாது. காவல்துறையின் இந்த அறிவிப்பை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story