சூடுபிடிக்காத பொங்கல் பானை விற்பனை


சூடுபிடிக்காத  பொங்கல் பானை விற்பனை
x
தினத்தந்தி 12 Jan 2022 4:13 PM IST (Updated: 12 Jan 2022 4:13 PM IST)
t-max-icont-min-icon

சூடுபிடிக்காத பொங்கல் பானை விற்பனை

பொங்கல் பண்டிகைக்கு மண் அடுப்பு வைத்து மண்பானையில் பொங்கல் வைப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்திலும் பலர் மண்பானையில் பொங்கல் வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் திருப்பூரில் மண்பானை விற்பனை இன்னமும் சூடுபிடிக்கவில்லை. திருப்பூர் மாநகரில் தாராபுரம் ரோடு, காங்கேயம் ரோடு, அவினாசி ரோடு, ஊத்துக்குளி ரோடு, மங்கலம் ரோடு, பி.என்.ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மண்பாண்ட பொருட்கள் சாலையோரத்திலும், கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மானாமதுரை, கம்பம், தேனி, கோவை, தருமபுரி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலிருந்து இங்கு மண்பானை, மண் அடுப்பு ஆகியவை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் மண் அடுப்பு ரூ.100 முதல் ரூ.150- வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மண்பானைகள் அதன் அளவிற்கு தகுந்தவாறு 100 ரூபாய் முதல் ரூ.300 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த காலங்களை ஒப்பிடும் போது திருப்பூரில் மண்பானை, மண் அடுப்புகளின் விற்பனை குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இரவு நேர ஊரடங்கு, பண்டிகை காலங்களில் கோவில்களுக்கு அனுமதி மறுப்பு போன்ற காரணத்தினால் பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. ஆனாலும், பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்கள் இருப்பதால் ஒருவேளை கடைசி நேர விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Next Story