மாவட்ட செய்திகள்

ஈரோடு மாநகர் பகுதியில்பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம் + "||" + pongal

ஈரோடு மாநகர் பகுதியில்பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்

ஈரோடு மாநகர் பகுதியில்பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
ஈரோடு மாநகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
ஈரோடு மாநகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
ஆவாரம்பூ-பூலப்பூ
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான இன்று (வியாழக்கிழமை) போகி பண்டிகை ஆகும். பழையன கழிந்து, புதியன புகும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் புதியவற்றை வரவேற்கும் வகையில், வீட்டின் கூரையில் வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவது வழக்கம்.
இதனையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள பன்னீர் செல்வம் பூங்கா, பெரியமாரியம்மன் கோவில், மணிக்கூண்டு, நேதாஜி மார்க்கெட், சூரம்பட்டி நால் ரோடு, சம்பத்நகர், மேட்டூர் ரோடு உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதியில் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியவற்றை காப்பு கட்ட ஏற்றவாறு சிறு சிறு கட்டுக்களாக கட்டி வியாபாரிகள் ரோட்டோரம் விற்பனை செய்து வருகின்றனர்.
கரும்பு-மஞ்சள்
இதில் ஒரு கட்டு ரூ.5-க்கும், 3 கட்டுகள் ரூ.10-க்கும் விற்பனை செய்கின்றனர். இதனை ஈரோடு மாநகர் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் பொங்கல் அன்று புதுப்பானையில் பொங்கல் வைப்பதை தமிழர்கள் இன்றுவரை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பொங்கல் வைக்கும் போது பொங்கல் பானைக்கு அருகில் மஞ்சள் குலை, கரும்பு, பழம் உள்ளிட்ட பொருட்களையும் வைப்பார்கள். இதற்காக ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் குலை மற்றும் கரும்பு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மழை வெள்ளத்தின்போது உணவு வழங்க உதவிய காளை மாடுகளுக்கு பொங்கல் விழா
மழை வெள்ளத்தின்போது உணவு வழங்க உதவிய காளை மாடுகளுக்கு பொங்கல் விழா மாலை அணிவித்து, கற்பூரம் காட்டி கிராம மக்கள் வழிபட்டனர்.
2. முழுஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல்
முழுஊரடங்கால் கடலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் விழா களையிழந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தது.
3. பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
4. தாய் வீட்டு பொங்கல் சீர்வரிசை
தாய் வீட்டில் இருந்து வருகிற சீதனம், பெண்களுக்கு எப்போதுமே உயர்வானது.
5. ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்... ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.