தினத்தந்தி புகார் பெட்டி
மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
ஆபத்தான மின்கம்பம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் பத்தூர் பகுதி உள்ளது. இந்த பகுதி வடக்கு தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளன. சேதமடைந்த மின்கம்பத்தினால் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், கொரடாச்சேரி.
காட்சி பொருளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் தாமரைபுலம் ஊராட்சியில் 3,5,6 ஆகிய வார்டு மக்களின் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ஏற்கனவே இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்பட்டதால், அதை இடித்து விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இருப்பினும் நீண்ட நாட்களாக அந்த நீர்த்தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், தாமரைபுலம் ஊராட்சி.
Related Tags :
Next Story