குடவாசல் ரேஷன் கடையில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீர் ஆய்வு


குடவாசல் ரேஷன் கடையில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jan 2022 10:08 PM IST (Updated: 12 Jan 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

குடவாசல் ரேஷன் கடையில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயனாளி ஒருவருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

குடவாசல்:
குடவாசல் ரேஷன் கடையில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது  பயனாளி ஒருவருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். 
கலெக்டர் ஆய்வு 
குடவாசலில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்  திடீர் ஆய்வு மேற்கொண்டார். இங்கு பொங்கல் பரிசு தொகுப்பு எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள அனைத்து பொருட்களும் தரமாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார். அப்போது இந்த பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். 
மாதம் தோறும் வழங்கப்படும் அரிசி, சீனி, மண்எண்ணெய், சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தரமானதாக உள்ளதா?  என்றும், எடை சரியாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார். 
பொங்கல் பரிசு தொகுப்பு 
அதனை தொடர்ந்து ரேஷன் கடையில் பயனாளி ஒருவருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா,  தாசில்தார் உஷாராணி, வட்ட வழங்கல் அலுவலர் சிவதாஸ், துணை தாசில்தார் சரவணகுமார் உள்பட பலர் இருந்தனர்.

Next Story