அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்ததால் மகசூல் பாதிக்கும் அபாயம்
கூத்தாநல்லூர் பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்துள்ளதால் மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்துள்ளதால் மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள்
நடப்பாண்டு பாசன வசதிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகளை அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டனர். பின்னர் அறுவடை பணிகள் முடிந்தது. அதனை தொடர்ந்து கூத்தாநல்லூர் பகுதிகளில் இரண்டாம் போக சாகுபடியாக சம்பா தாளடி பணிகளை அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சம்பா தாளடி பயிர்கள் வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால், கூத்தாநல்லூர் பகுதிகளில் பல இடங்களில் அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.
மகசூல் பாதிக்கும் அபாயம்
இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சில நாட்கள் தண்ணீரிலேயே மூழ்கியே இருந்தது. இதனால் நெற்கதிர்களின் முளைப்பு தன்மை பாதியளவில் சேதம் அடைந்தது என்றும், நெற்கதிர்கள் பாதியளவில் கருக்காய் இருக்கும் என்றும், சாய்ந்த பயிர்களை அறுவடை செய்வதில் சிரமம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதும் என்றும், சாய்ந்த பயிர்களை அறுவடை செய்யும் போது எதிர்பார்த்த அளவை விட மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது என்றும் அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story