மாவட்ட செய்திகள்

மூங்கில்துறைப்பட்டு சங்கராபுரம் பகுதிகளில் மாட்டு பொங்கலுக்காக வண்ண கயிறுகள் விற்பனை தீவிரம் + "||" + In the Sankarapuram areas with bamboo Intensity of sales of colored ropes for cow pongal

மூங்கில்துறைப்பட்டு சங்கராபுரம் பகுதிகளில் மாட்டு பொங்கலுக்காக வண்ண கயிறுகள் விற்பனை தீவிரம்

மூங்கில்துறைப்பட்டு சங்கராபுரம் பகுதிகளில் மாட்டு பொங்கலுக்காக வண்ண கயிறுகள் விற்பனை தீவிரம்
மூங்கில்துறைப்பட்டு சங்கராபுரம் பகுதிகளில் மாட்டு பொங்கலுக்காக வண்ண கயிறுகள் விற்பனை தீவிரம்

மூங்கில்துறைப்பட்டு

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. மறுநாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். மாட்டு பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கழுத்து, மூக்குகளில் புத்தம் புது வண்ண கயிறுகளை அணிவித்து   அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். 

இதையொட்டி மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வண்ண கயிறுகள், வர்ணம் ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்து வருகிறது. விவசாயிகள் மற்றும் மாடுகளை வளர்ப்போர் தங்களுக்கு பிடித்தமான வர்ணங்களையும், வண்ண கயிறுகளையும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
அதேபோல் சங்கராபுரம் கடைவீதியிலும் மாடுகளுக்கு அணிவிப்பதற்காக வண்ண கயிறுகள் மற்றும் கொம்புகளில் பூசுவதற்கான வர்ணங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.