கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் இரு மடங்கு அதிகரித்த தொற்று: 230 பேருக்கு கொரோனா பாதிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் இரு மடங்கு அதிகரித்த தொற்று: 230 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 5:43 PM GMT (Updated: 12 Jan 2022 5:43 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா இரு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று 230 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி:
கொரோனா பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் கொரோனாவின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 944 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 43 ஆயிரத்து 843 பேர் குணமாகி உள்ளனர். 362 பேர் உயிரிழந்த நிலையில் 739 பேர் தற்போது சிகிச்சை உள்ளனர்.
இரு மடங்கு அதிகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 127 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த பாதிப்பு நேற்று இரு மடங்கு அதிகரித்தது. அதாவது மாவட்டத்தில் 230 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க போலீசார், ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர், சுகாதார துறையினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story