மாவட்ட செய்திகள்

குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி + "||" + 9th grade student who gave birth to a child

குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி

குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி
9-ம் வகுப்பு மாணவிக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக 42 வயதான தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோபால்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள சின்னசெடிபட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 42). தேங்காய் உறிக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

 இந்தநிலையில் கருப்புசாமி, செங்குறிச்சி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகினார்.

இதில், அந்த மாணவி கர்ப்பம் ஆனார். கடந்த 8-ந்தேதி மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மாணவியின் தாயார், சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

 அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்புசாமியை போலீசார் கைது செய்தனர்.