புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு
ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்தப்படியே உள்ளது. தினசரி பாதிப்பில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 531 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 10 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 987 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது.
Related Tags :
Next Story