மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் வந்த தொழிலாளி அடுத்தடுத்து மோதி பலி + "||" + The worker on the motorcycle was killed in a subsequent collision

மோட்டார்சைக்கிளில் வந்த தொழிலாளி அடுத்தடுத்து மோதி பலி

மோட்டார்சைக்கிளில் வந்த தொழிலாளி அடுத்தடுத்து மோதி பலி
மோட்டார்சைக்கிளில் வந்த தொழிலாளி அடுத்தடுத்து மோதி பலி
கலவை

மோட்டார் சைக்கிளில் வந்த தொழிலாளி அடுத்தடுத்து மோதி பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பழைய சொரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியின் மகன் குமார் (வயது 45), கூலித்தொழிலாளி. அவர் நேற்று மோட்டார்சைக்கிளில் கலவையில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று ெகாண்டிருந்தார்.

வேம்பியை அடுத்த மேட்டுத்தெரு அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த வெங்கடேசன் (49) என்பவர் மீது குமாரின் மோட்டார்சைக்கிள் மோதி, நிற்காமல் ஓடி அந்த வழியாக எதிரே மோட்டார்ைசக்கிளில் வந்த மேலபந்தை கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கத்தின் மீது மோதி கீழே விழுந்த குமாருக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கலவை போலீசார் விரைந்து வந்து, குமாரின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.