மாவட்ட செய்திகள்

மோர்தானா அணை கால்வாயில் விழுந்து சிறுவன் பலி + "||" + The boy fell into the Mordhana Dam canal and died

மோர்தானா அணை கால்வாயில் விழுந்து சிறுவன் பலி

மோர்தானா அணை கால்வாயில் விழுந்து சிறுவன் பலி
மோர்தானா அணை கால்வாயில் விழுந்து சிறுவன் பலி
கே.வி.குப்பம்

மோர்தானா அணை கால்வாயில் விழுந்து சிறுவன் பலியானான்.
கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் புவனேஸ்வரன் (வயது 12). இவன், தனது தாய் ஜெயலட்சுமியுடன் மோர்தானா அணையின் இடதுபுறக் கால்வாய் ஓரமாக நடந்து சென்றபோது, திடீரென கால் தவறி அணை கால்வாய் நீரில் விழுந்து விட்டான். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்டனர். ஆனால் அவன் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். 

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் தாயார் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.