கொரோனா சிகிச்சை மையத்தில் கலெக்டர் விசாகன் ஆய்வு


கொரோனா சிகிச்சை மையத்தில் கலெக்டர் விசாகன் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jan 2022 11:24 PM IST (Updated: 12 Jan 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனாவின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

மேலும் கொரோனா பாதிப்பை கண்டறிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. அதேபோல் நடமாடும் குழுக்கள் மூலம் நோய் பாதித்த பகுதிகளுக்கே சென்று மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் வார்டுகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் மருத்துவமனைகளை தவிரத்து கல்லூரிகளிலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

 அதன்படி திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மையத்தில் கலெக்டர் விசாகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அமைக்கப்பட்டு உள்ள படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story