திருவண்ணாமலையில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்


திருவண்ணாமலையில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Jan 2022 5:55 PM GMT (Updated: 12 Jan 2022 5:55 PM GMT)

திருவண்ணாமலையில் காய்கறி மார்க்ெகட் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் காய்கறி மார்க்ெகட் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

திருவண்ணாமலை மாடவீதி திருவூடல் தெருவில் காய்கறி மார்க்கெட் உள்ளது. கொரோனா பரவலால் காய்கறி மார்க்கெட்டை திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் தற்காலிகமாக அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

தற்போது பொங்கல் பண்டிகை வியாபாரம் பாதிப்பதாக கூறி காய்கறி வியாபாரிகள் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்கள் மட்டும் (நேற்றும், இன்றும்) மார்க்கெட்டிலேயே கடையை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கூறி ேநற்று காலை மார்க்கெட் முன்பு தரையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தனால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. 
கலெக்டர் ேபச்சு வார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உதவி கலெக்டர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும் சாலை மறியலை ைகவிட்டு களைந்து சென்றனர்.

இதையடுத்து மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளில் முக்கிய பிரதிநிதிகள் 10 பேரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களிடம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 

கடைகளை திறக்க ஒப்புதல்

அப்போது தாசில்தார் சுரேஷ் கூறுகையில், இருப்பு காய்கறியை விற்பனை செய்து விட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் உள்ள மைதானத்தில் கடைகளை திறக்க வியாபாரிகள் ஒப்பு கொண்டதாக, தெரிவித்தார்.

Next Story