திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம்


திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2022 11:25 PM IST (Updated: 12 Jan 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

பாஞ்சாப் மாநில அரசை கண்டித்தும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருவூடல் திருவிழாவை திருவூடல் தெருவில் நடத்த கோரியும் பா.ஜ.க. சார்பில் நேற்று காலை திருவண்ணாமலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

 அறிவொளி பூங்காவில் இருந்து இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் வரை கை கோர்த்த படி நின்றனர். வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன், பிரசார பிரிவு மாவட்டத் தலைவர் அரங்கநாதன், அமைப்பு சாரா அணி மாவட்டத் தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் வி.செல்வராஜ் வரவேற்றார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில வாத்தக பிரிவு துணை தலைவர் திருநாவுகரசு, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். கோட்ட அமைப்பு செயலாளர் குணசேரன், மாநில செயற்குழு உறுப்பினர் நேரு, வி.எச்.பி. மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட பொது செயலாளர் சதீஷ்குமார், சேகர், ரமேஷ் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story