மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள், புத்தாடைகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் + "||" + Public interest in buying vegetables and puddings

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள், புத்தாடைகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள், புத்தாடைகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் காய்கறி மற்றும் புத்தாடை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
திருவண்ணாமலை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் காய்கறி மற்றும் புத்தாடை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். 

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை ெகாண்டாட பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் நேற்று முதல் கரும்பு கட்டு, மஞ்சள் கொத்துகள் போன்றவை வெளியூர்களிலிருந்து லாரி, வேன்களில் வியாபாரிகள் கொண்டுவந்த வண்ணம் உள்ளனர்,
மேலும் புத்தாடைகள் எடுக்க பெரிய முதல் சிறிய துணி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. 

 சாலையோரங்களில் உள்ள தரைக்கடைகளில் துணி வியாபாரங்களும் அமோகமாக நடந்து வருகிறது. 
காய்கறி மார்க்கெட்டுகளில் இன்று நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் நேற்றே ஏராளமானோர் பொங்கலுக்கு தேவையான காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றவாறு உள்ளனர்.
இதனால் நேற்று திருவண்ணாமலை நகரமே பரபரப்பாக காணப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) பொங்கல் பொருட்கள் விற்பனை உச்சகட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன்கடைகளில் கரும்பு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதால் மற்ற பொருட்களான மஞ்சள் கொத்து, காய்கறிகள், கிழங்கு வகைகள், வாழை இலை விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை போன்றவற்றில் இதற்கு தேவையான ஏற்பாடுகள் தயாராகி உள்ளன.

காய்கறி விலை

திருவண்ணாமலை உழவர் சந்தையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:- 
தக்காளி- ரூ.20-30, உருளைக்கிழங்கு- ரூ.30- 50, வள்ளிக்கிழங்கு- ரூ.15- 20, கருணக்கிழங்கு- ரூ.20- 30, சின்னவெங்காயம்- ரூ.60- 80, வெங்காயம் (பெல்லாரி) - ரூ.30- 45, பூண்டு- ரூ.60-80, கத்தரிக்காய்- ரூ.40- 80, வெண்டைக்காய்- ரூ.56-60, 
அவரைக்காய்- ரூ.60- 72, பீன்ஸ்- ரூ.40- 48, பூசணிக்காய்- ரூ.20- 25, சேப்பங்கிழங்கு- ரூ.16- 20, மரவள்ளிக்கிழங்கு- ரூ.15- 20, சர்க்கரை வள்ளிக்கிழங்கு- ரூ.36- 40, பீட்ரூட்- ரூ.70, கொத்தவரைக்காய்- ரூ.36- 40, மாங்காய்- ரூ.60- 120 என விற்பனை செய்யப்பட்டது. 

இன்று (வியாழக்கிழமை) மேற்கண்ட காய்கறி விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றும், இருந்தாலும் ரூ.5 அல்லது ரூ.10 என்ற அளவிலேயே வித்தியாசம் இருக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காய்கறிகள் வாங்க வாரச்சந்தையில் குவிந்த மக்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் வாங்க வாரச்சந்தையில் மக்கள் அதிகளவில் குவிந்தனர்.
2. காய்கறிகள், பழங்களை அனுப்பும் கிசான் ரெயில் விழிப்புணர்வு பிரசாரம்
மதுரை கோட்டத்தில் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தங்களது விளைபொருட்களை சலுகை கட்டணத்தில் கிசான் ரெயிலில் அனுப்புவதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை கோட்ட மேலாளர் நேற்று தொடங்கி வைத்தார்.
3. ஈரோட்டில் காய்கறிகள் விலை கடும் உயர்வு
ஈரோட்டில் காய்கறிகள் விலை கடமையாக உயர்ந்தது.
4. ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
5. காய்கறிகளின் விலை குறைய நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி
காய்கறிகளின் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.