கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை


கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை
x
தினத்தந்தி 12 Jan 2022 11:30 PM IST (Updated: 12 Jan 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:
பொங்கல் பண்டிகையையொட்டி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண்டல இணை ஆணையர் பாரதி கலந்து கொண்டு கோவில் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.

இதில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள், பணியாளர்கள் என 86 பேருக்கு புத்தாடைகள், சீருடைகள் வழங்கப்பட்டன.

 இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, கோட்டை மாரியம்மன் கோவில் நிர்வாக அறங்காவலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story