தொல்லியல் எச்சங்கள் உள்ள பகுதிகளில் அதிகாரி ஆய்வு
தொல்லியல் எச்சங்கள் உள்ள பகுதிகளில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பல நூறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் தொல்லியல் எச்சங்கள் காணப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடல்வாழ் உயிரினங்களில் தொல்லியல் எச்சங்கள் காணப்படும் காரை மேற்கு பகுதியில் நேற்று புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் எல்.நிர்மல்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், இந்த பகுதியில் பல நூறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கண்டறியப்பட்டுள்ள கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்களை எவ்வாறு பாதுகாப்பது?, அவற்றை பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு காட்சிப்படுத்துவது எப்படி? என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது சுரங்கத் துறை இணை இயக்குனர் சரவணன், உதவி இயக்குனர் சத்தியசீலன், உதவி புவியியலாளர் இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story