மாவட்ட செய்திகள்

துணை தாசில்தாரின் தந்தை மர்ம சாவு + "||" + Mysterious death

துணை தாசில்தாரின் தந்தை மர்ம சாவு

துணை தாசில்தாரின் தந்தை மர்ம சாவு
துணை தாசில்தாரின் தந்தை மர்ம சாவு
தா.பேட்டை,ஜன.13-
துறையூர் தாலுகா சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பையா (வயது 63). இவருக்கு நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை சுப்பையா வயலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது தோட்டத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வேல்முருகன் என்பவரது தோட்டத்தின் அருகே மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் உடலில் லேசான காயங்களுடன் மர்மமான முறையில் சுப்பையா இறந்து கிடந்தார். தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பையாவின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  சுப்பையாவின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுப்பையாவின் மகன் கோவிந்தராஜ் உப்பிலியபுரம் பகுதி துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சேத்தியாத்தோப்பு அருகே கள்ளக்காதலியை பார்க்க சென்ற தொழிலாளி மர்ம சாவு
சேத்தியாத்தோப்பு அருகே கள்ளக்காதலியை பார்க்க சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
2. வெல்டர் மர்ம சாவு
வெல்டர் மர்மமான முறையில் இறந்தார்.
3. ஒலிபெருக்கி நிலைய உரிமையாளர் மர்ம சாவு
ஒலிபெருக்கி நிலைய உரிமையாளர் மர்ம முறையில் இறந்தார்.
4. சிறுவன் மர்ம சாவு
சிறுவன் மர்மமான முறையில் இறந்தான்.
5. போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் மர்ம சாவு
முதுகுளத்தூர் அருகே போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரை போலீசார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.