மாவட்ட செய்திகள்

சுரண்டை அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரிகாலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் + "||" + Villagers protest for regular supply of drinking water

சுரண்டை அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரிகாலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

சுரண்டை அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரிகாலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
சீராக குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே வீராணம் கிராமத்தில் தாழ்வான இடத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்வதால், மேடான பகுதிகளுக்கு போதிய குடிநீர் கிடைக்கப்பெறவில்லை என்று கூறி, நேற்று கிராம மக்கள் வீராணம் பஞ்சாயத்து அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வீரகேரளம்புதூர் தாசில்தார் மாரிமுத்து, சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.