டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு


டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 2:00 AM IST (Updated: 13 Jan 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

மதுரை சரகத்தில் 100-வது டி.ஐ.ஜி.யாக பொன்னி பொறுப்பேற்பு

மதுரை
மதுரை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த காமினி, சென்னை குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, பதவி உயர்வு பெற்று மதுரை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்படுவார் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பொன்னி நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன்பு இவர் நாகை, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறையிலும் பணியாற்றி இருக்கிறார். மதுரை சரகத்தில் 100-வது டி.ஐ.ஜி.யாக பொன்னி பொறுப்பேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story