மாவட்ட செய்திகள்

பயிர்க்கடன் வழங்கியதில் மோசடி:கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம்இணைப்பதிவாளர் நடவடிக்கை + "||" + Suspension of the Secretary of the Co-operative Society

பயிர்க்கடன் வழங்கியதில் மோசடி:கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம்இணைப்பதிவாளர் நடவடிக்கை

பயிர்க்கடன் வழங்கியதில் மோசடி:கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம்இணைப்பதிவாளர் நடவடிக்கை
பயிர்க்கடன் வழங்கியதில் மோசடி செய்தது தொடர்பாக கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வழங்கியதில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பட்டியலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ரூ.1¾ கோடி வரை மோசடி செய்யப்பட்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே இந்த மோசடி விவகாரம் தொடர்பாக வெள்ளரிவெள்ளி கூட்டுறவு சங்க செயலாளர் மோகனை பணி இடைநீக்கம் செய்து சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே இதே வங்கியில் ராமசாமி என்பவர் இறந்த பிறகு அவரது பெயரில் கடன் வழங்கியதும், அதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.