மாவட்ட செய்திகள்

மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்படநெல்லை, தூத்துக்குடியில் மேலும் 740 பேருக்கு கொேரானா + "||" + Corona for another 740 people in Nellai, Thoothukudi

மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்படநெல்லை, தூத்துக்குடியில் மேலும் 740 பேருக்கு கொேரானா

மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்படநெல்லை, தூத்துக்குடியில் மேலும் 740 பேருக்கு கொேரானா
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட மேலும் 740 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட மேலும் 740 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
451 பேருக்கு தொற்று
நெல்லை மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று நெல்லை மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் 15 போ், பாளையங்கோட்டை சாந்தி நகர், சந்திப்பு போலீஸ் குடியிருப்பு ஆகிய பகுதியில் உள்ள சில போலீஸ்காரர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், வங்கி ஊழியர்கள் என நெல்லை மாவட்டத்தில் மேலும் 451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மாநகர பகுதியில் மட்டும் 204 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 
இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 384-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 547 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,400 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தூத்துக்குடி-தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 627 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை முடிந்து 26 ஆயிரத்து 976 பேர் வீடு திரும்பி உள்ளனர். 165 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 186-ஆக அதிகரித்து உள்ளது. 56 ஆயிரத்து 468 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 1,303 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
பெண் சாவு
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 50 வயது பெண் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 415-ஆக அதிகரித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் 4 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி - அரசு மருத்துவமனையில் அனுமதி
நெல்லை அரசு மருத்துவமனையில் 4 பேர் ஒமைக்ரான் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பரவலான மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
4. நெல்லையில் “புத்தகங்களோடு புத்தாண்டு” என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இலவச புத்தகம் வழங்கி திருநெல்வேலியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.
5. நெல்லை, தென்காசியில் மேலும் 5 பேருக்கு கொரோனா
நெல்லை, தென்காசியில் மேலும் 5 பேருக்கு கொரோனா