மாவட்ட செய்திகள்

பணம் இரட்டிப்பு மோசடி:நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கேரள பெண்கள் புகார் + "||" + Kerala women lodge a complaint at the Nellai Police Commissioners Office

பணம் இரட்டிப்பு மோசடி:நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கேரள பெண்கள் புகார்

பணம் இரட்டிப்பு மோசடி:நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கேரள பெண்கள் புகார்
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கேரள பெண்கள் புகார் கொடுத்தனர்
நெல்லை:
கேரளாவைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.அதில், ‘நெல்லையைச் சேர்ந்த தொழில் அதிபர் நடத்திய நிதி நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறியதால், பல பெண்கள் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளோம். தவணைக்காலம் முடிந்தபின் பணத்தை இரண்டு மடங்காக தருவதாக நிர்வாகத்தினர் கூறினர். ஆனால் பணத்தை தராமல் மோசடி செய்து வருகின்றனர். எனவே பணத்தை மீட்டு தர வேண்டும். மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.