மாவட்ட செய்திகள்

பணகுடியில்ரூ.2¼ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள்சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார் + "||" + Development projects worth Rs. 20 crore

பணகுடியில்ரூ.2¼ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள்சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்

பணகுடியில்ரூ.2¼ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள்சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்
ரூ.2¼ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்
பணகுடி:
பணகுடியில் ரூ.2¼ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
வளர்ச்சித்திட்ட பணிகள்
பணகுடி நகர பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.2¼ கோடி மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், குடிநீர் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சபாநாயகர் மு.அப்பாவு தலைமை தாங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக பணகுடி பாம்பன்குளம் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
குடிநீர் மேம்பாட்டு
பணகுடி, வள்ளியூர், திசையன்விளை உள்ளிட்ட 8 நகர பஞ்சாயத்துகளில் ரூ.721 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும். இதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் தாமிரபரணி குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
பொதுமக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ராதாபுரம் தொகுதியிலும் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அழகிரி, மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.