மாவட்ட செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம் + "||" + Rural development officials went on strike

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தா.பழூர்
பணிச்சுமை
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அதிக பணிச்சுமை தரப்படுவதாக குற்றம்சாட்டி பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தியும், போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் சிறியது முதல் பெரிய அளவிலான புள்ளிவிவரங்கள் வரை உடனடியாக கோப்புகள் தயார் செய்து சமர்ப்பிக்க உத்தரவிடும் அதிகாரிகள் நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் முன்னறிவிப்பு இல்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் தொடர்ந்து ஆனநிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தவறு என்று உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் இதுவரை பணி ஓய்வு பெற அனுமதிக்கவில்லை. 
வேலைநிறுத்தம்
இதனை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதனை ஏற்று அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அனைத்து நிலை பணியாளர்களும், ஊழியர்களும் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து இருக்கைகளும் காலியாகவே இருந்தன. பணியாளர்கள் பணிக்கு வராததால் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் தடைபட்டன.