மாவட்ட செய்திகள்

ரஷிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 18 ஆண்டு ஜெயில்; சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு + "||" + Russian man jailed for 18 years; Chennai Special Court judgment

ரஷிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 18 ஆண்டு ஜெயில்; சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

ரஷிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 18 ஆண்டு ஜெயில்; சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
ரஷிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 18 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ரஷிய நாட்டைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 48). இவர், புதுச்சேரியில் வசித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு இவர், மூலிகை மருந்து என போதைப்பொருட்களை அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளுக்கு விரைவுத்தபால் மூலம் அனுப்பி வந்தார். இதை அறிந்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

 வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, அலெக்சாண்டர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் மீது பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் 5 சட்டப்பிரிவுகளில் தனித்தனியாக 18 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.