மாவட்ட செய்திகள்

படிப்பு பாதியில் நின்று விடுமோ என்ற அச்சத்தில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + 9th grader commits suicide by hanging for fear of dropping out

படிப்பு பாதியில் நின்று விடுமோ என்ற அச்சத்தில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

படிப்பு பாதியில் நின்று விடுமோ என்ற அச்சத்தில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
படிப்பு பாதியில் நின்று விடுமோ என்ற அச்சத்தில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் எம்.ஏ.சி. நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 42). கழிவுநீர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் பவானி (14). இவர் குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பார்த்திபன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பவானி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பவானியை மீட்டு பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பவானி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன பவானி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பு பாதியில் நின்று விடுமோ என்ற மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


!-- Right4 -->