மாவட்ட செய்திகள்

குவிந்த கிடக்கும் குப்பை + "||" + Accumulated garbage

குவிந்த கிடக்கும் குப்பை

குவிந்த கிடக்கும் குப்பை
குவிந்த கிடக்கும் குப்பை
வெள்ளகோவில் அருகே வட்டமலை ஓடை அணை உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த அணைக்கு  தண்ணீர் வந்துள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அணைக்கு வந்து அணையை பார்வையிட்டு செல்கிறார்கள். 
ஆனால் அழகு கொஞ்சி கிடக்கும் அணை பகுதியை மது பிரியர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். மதுவாங்கி வந்து அணை பகுதியில் குடித்து பிளாஸ்டிக் டம்ளர், காலி மதுபாட்டில்களை உடைத்து அங்கேயே போட்டு விடுகிறார்கள். மது பிரியர்களுக்கான டாஸ்மார் பார் திறக்கப்பட்டுள்ளது. அங்கு வைத்துமது குடிப்பது நன்று. ஆனால் அணை பகுதிக்கு வந்து மது குடித்து போதையில் அட்டகாசம் செய்வது கவலை அளிக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குவிந்த கிடக்கும் குப்பை
பெருமாநல்லூரை அடுத்து தட்டான்குட்டையில் இருந்து அத்திகாடு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் குப்பை நிரம்பி வழிகிறது. இந்த குப்பை அகற்றப்படாததால் அதன் அருகில் குப்பையை பொதுமக்கள் கொட்டி செல்கிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தினமும் குப்பை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.