களை கட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை


களை கட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2022 10:36 AM GMT (Updated: 13 Jan 2022 10:36 AM GMT)

களை கட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை

காங்கேயத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. ஒரு ஜோடி கரும்பு ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் திருநாள்
காங்கேயம் பகுதியில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளில் காப்பு கட்டி, மாவிலை தோரணம் கட்டி, கோலம்போட்டு, புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடாடுவது வழக்கம். மேலும் இந்த பகுதியில் கால்நடை வளர்ப்பு என்பது விவசாயிகளின் முக்கிய தொழிலாக உள்ளது. இதனால் மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும். விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் பசு மாடுகள் மற்றும் காளைகளை குளிப்பாட்டி அதற்கு அலங்காரம் செய்து பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.
பொங்கலுக்கு மக்கள் அதிகம் விரும்பி சுவைப்பது கரும்பாகும். இதனால் காங்கேயம் பகுதியில் கருப்பு விற்பனை ஆண்டுதோறும் விறுவிறுப்பாக நடைபெறும். இதனால் வியாபாரிகள் காங்கேயம் நகரில் பல இடங்களில் வியாபாரிகள் கருப்பை கொண்டு வந்து குவித்து வருகிறார்கள். இதனால் கருப்பு விற்பனை தொடங்கியுள்ளது. காங்கேயத்தில் முதல் தரமான ஒரு ஜோடி கரும்பு ரூ.100 க்கும், இரண்டாம் தரமான ஒரு ஜோடி கரும்பு ரூ.80 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
களை கட்டிய விற்பனை
பொங்கல் திருநாள் இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. பொங்கலுக்கு தேவையான மண்பானை, மஞ்சள் மற்றும் பூஜைக்கு உகந்த பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. வண்ண கோலப்பொடியையும் பெண்கள் வாங்கி சென்றனர். 


Next Story