மாவட்ட செய்திகள்

71 லட்சத்துக்கு பருத்தி ஏலம் + "||" + cotton sales in 71 lakhs

71 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

71 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
71 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் நடந்த பருத்தி ஏலத்திற்கு 2,394 மூட்டை பருத்தி வந்திருந்தது. இது கடந்த வாரத்தை காட்டிலும் 420 மூட்டைகள் குறைவாகும். ஏலத்தில் டி.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.13,600 வரையிலும், ஆர்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10,262 வரையிலும், மட்டரகப் பருத்தி குவின்டால் ரூ. 2,500 முதல் ரூ. 5 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.71 லட்சத்து 13 ஆயிரமாகும்.இந்த தகவலை சங்கமேலாண்மை இயக்குனர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.