மாவட்ட செய்திகள்

கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு + "||" + In the temples of Perumal Heaven Gate Opening

கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
உடுமலையில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
உடுமலை திருப்பதி
உடுமலை  அருகில் உள்ள செங்குளம் கரைப்பகுதியில் உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பத்மாவதி தாயார், ஆண்டாள் சமேத வேங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி கோவில் சுற்றுபிரகாரத்தில்  உலாவந்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஶ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள், பக்தபிரமுகர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
 பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள ஶ்ரீதேவி, பூமாதேவி சமேத  சவுரிராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா, சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடந்தன. .விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆர்.சீனிவாச சம்பத் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 நெல்லுக்கடை வீதியில் உள்ள பூமிநீலா நாயகி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாநடந்தது. ஶ்ரீசவுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நவநீத கிருஷ்ணசுவாமி
இதேபோன்று பெரியகடை வீதியில் உள்ள  நவநீதகிருஷ்ணசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஶ்ரீதேவி பூமாதேவி சமேத சீனிவாச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு மற்றும் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கோவில் வாசல்களில் வாழைமரங்கள் கட்டப்பட்டு 'மா' இலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கோவில் சன்னதிகளின் வாயில்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.