மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டத்தில் 4 பேர்கைது + "||" + 4 arrested under thuggery law

குண்டர் சட்டத்தில் 4 பேர்கைது

குண்டர் சட்டத்தில் 4 பேர்கைது
தூத்துக்குடியில் ஹெராயின் போதைப்பொருள் பதுக்கிய வழக்கில் கைதான மேலும் 4 பேர் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஹெராயின் போதைப்பொருள் பதுக்கிய வழக்கில் கைதான மேலும் 4 பேர் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஹெராயின் பதுக்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி கடந்த 21.12.21 அன்று தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரூ.21 கோடி மதிப்பிலான 21 கிலோ ஹெராயின் போதை பொருளை மத்தியபாகம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
7 பேர் கைது
இது தொடர்பாக ஹெராயின் போதை பொருளை பதுக்கியதாக, தருவைகுளம் அம்புரோஸ்நகரை சேர்ந்த சவரிமுத்து மகன் அந்தோணிமுத்து (வயது 42), நவமணி நகரை சேர்ந்த ராஜேந்தர் மகன் பிரேம்சிங் (38), பட்டினமருதூரை சேர்ந்த சவுகத் அலி மகன் கசாலி மரைக்காயர் (27), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மைதீன் மகன் அன்சார் அலி (26), யோகீசுவரர் காலனியை சேர்ந்த முனியசாமி மகன் மாரிமுத்து (26), டூவிபுரத்தை சேர்ந்த ஷாஜகான் மகன் இம்ரான்கான் (27), அண்ணாநகரை சேர்ந்த கோசல்ராம் மகன் பாலமுருகன் (26) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அந்தோணிமுத்து, பிரேம்சிங், கசாலி மரைக்காயர் ஆகிய 3 பேரும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 4 பேர் ...
இந்த நிலையில் மீதம் உள்ள 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் சட்டத்தின் கீழ் அன்சார் அலி (26), மாரிமுத்து (26), இம்ரான்கான் (27), பாலமுருகன் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.