மாவட்ட செய்திகள்

வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபர் கைது + "||" + Youth arrested for hoarding tobacco products at home

வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபர் கைது

வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபர் கைது
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி இருந்த ரூ.1 லட்சம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி இருந்த  ரூ.1 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் சோதனை
கோவில்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கத்தை ஒழிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவில்பட்டி ராஜீவ்நகரில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  
இதை தொடர்ந்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் உத்தரவின் பேரில், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீசார் ராஜீவ் நகர் 4-வது தெருவில் கருப்பசாமி மகன் காளிராஜ் (வயது 30) என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினா்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
அந்த வீட்டில் ஒரு பிளாஸ்டிக் சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது, அதில்  புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த மூட்டையில் 399 பாக்கெட்டுகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தன.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த காளிராஜை கைது செய்தனர்.