மாவட்ட செய்திகள்

மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் + "||" + Farmers demonstrate with cows

மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கடமலைக்குண்டுவில் கால்நடை மருத்துவமனை செயல்படாததை கண்டித்து விவசாயிகள் மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி : 

கடமலைக்குண்டுவில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி செலுத்தாததை கண்டித்தும், கடமலைக்குண்டு கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர் வராமல் இருப்பதால், வாரத்தில் 4 நாட்கள் பூட்டிய நிலையிலேயே இருப்பதை கண்டித்தும் கோஷமிட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.