புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி முகாம்


புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 13 Jan 2022 1:51 PM GMT (Updated: 13 Jan 2022 1:51 PM GMT)

கண்டமனூர் வனத்துறை அலுவலகத்தில் புலிகள் குறித்து கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.

தேனி: 

கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. இந்நிலையில் கண்டமனூர் வனச்சரக அலுவலகத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.

 இதற்கு மேகமலை புலிகள் சரணாலய துணை இயக்குனர் ஆனந்த் தலைமை தாங்கினார். வனச்சரகர்கள் ஆறுமுகம், சதீஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முகாமில் துல்லியமாகவும் விரைவாகவும் கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செல்போன் செயலி குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாதிரி கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. 

இதில் எச்சம், கால்தடம் உள்ளிட்டவைகள் மூலம் வனவிலங்குகளை அடையாளம் காண்பது குறித்து பணியாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. விரைவில் வனப்பகுதியில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story