மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு + "||" + Heaven Gate Opening at Thoothukudi Perumal Temple

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகுண்ட ஏகாதசி விழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று காலை விசுவரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து திருமஞ்சனம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தன.
மாலையில் சொர்க்கவாசலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக வைகுண்டபதி பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி வந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து ராப்பத்து விழா தொடங்கியது. தினமும் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்று வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.